தமிழர்களின் உயிர் மீதும் உரிமை மீதும் யார் வேண்டுமானாலும் விளையாடலாம் தமிழர்களின் பெயரை சொல்லி யார் வேண்டுமானாலும் அரசியல் நடத்தலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக பல அரசியல் கட்சிகள் இருப்பது அனைவரும் அறிந்ததே. அந்த வரிசையில் இப்போது புதிதாக தன்னை இணைத்துக்கொண்டுள்ளது திரைப்பட இயக்குனர் சீமான் அவர்கள் ஆரம்பித்திருக்கும் நாம் தமிழர் என்ற கட்சி.
2009 ஆம் ஆண்டில் நம் அன்பு உறவுகள் பட்ட துயரங்களை கண்டு மனம் கொதித்து போன லட்ச்சோப லட்ச்ச இளைஞ்சர்கள் சீமான் அவர்களின் பேச்சில் ஈர்க்கப்பட்டு அவரின் பின்னால் அணிவகுக்க தொடங்கினர், அப்படி சென்றவர்களில் நானும் ஒருவன்.
துன்பங்களில் துவண்டு போயிருக்கும் தமிழர்களின் வாழ்வில் இனி சுகம் வரப்போகிறது என்று மிகுந்த நம்பிக்கை வரவழைத்தது சீமான் அவர்களின் பேச்சு.
மற்றும் ஒரு அரசியல் கட்சி அல்ல மாற்று அரசியல் புரட்ச்சி என்று அவர் மேடைகளில் முழங்கும்போதெல்லாம் மனதில் தமிழன் என்ற கர்வம் வந்துசெல்ல தவறவில்லை.
இப்படியாக சென்ற நாம் தமிழர் கட்சி நாளடைவில் தன்னையும் மற்றும் ஒரு அரசியல் கட்சி என்பதுபோல நடந்துகொண்டது. எப்போது சீமான் அவர்கள் தனது நோக்கம் தவறி அரசியல் செய்தார்களோ அங்கே தான் அவர்களின் தோல்வி ஆரம்பம் ஆனது. இப்போது கொள்கை சித்தாந்தம் வலுவாக இல்லாத சரியான தெளிவு இல்லாத ஒரு காட்சியாக உள்ளது நாம் தமிழர் கட்சி.
நாம் தமிழர் கட்சி தன்னை மற்றும் ஒரு அரசியல் கட்சி என்று பறைசாற்றிய முதல் நிகழ்வு தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இலங்கைக்கு எதிராக ஒரு தீர்மானம் நிறைவேற்றியபோது என்னவோ இலங்கை தண்டிக்க பட்டு விட்டது என்பதுபோல பேச ஆரம்பித்துவிட்டார்.
அவர் மேடையில் முழங்கிய வார்த்தைகள் ஜெயலலிதா அவர்களை ஈழத்தாய் என்றது பலருக்கும் மிகுந்த வேதனை தரும் நிகழ்வாகவே அமைந்தது. மேலும் கருணாநிதி அவர்களுடன் ஒப்பிட்டு ஜெயலலிதா அவர்களை புரட்ச்சித் தலைவி என்றும் ஜெயலலிதா அவர்களின் பெயர் இல்லாமல் ஈழம் வரலாறு எழுதப்படாது என்றும் அவர் பேசியது தமிழ் உணவாளர்களை மிகுந்த வேதனையில் ஆழ்த்தியது.
ஜெயலலிதா அவர்கள் ஈழம் மற்றும் புலிகள் மீது கொண்டிருந்த பார்வை என்னவென்று அறிந்தும் சீமான் அவர்கள் தமிழக முதல்வரை இப்படி எல்லாம் புகழ்ந்தது எல்லோருக்குமே ஒரு அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
அ தி மு க விற்கு வாக்கு கேட்க்கும் சீமான் பெருமை அடைவானே தவிற ஒரு போதும் சிறுமை அடைய மாட்டான் என்ற சீமான் அவர்கள் அதற்கு சொன்ன காரணம் தி மு க - வை தோல்வி அடைய செய்யவே அ தி மு க -வை ஆதரிக்கிறோம் என்று, அதே காரணத்தை கூறித்தான் காங்கிரஸ் என்ற கட்சியை ஆட்ச்சியை இழக்க செய்ய ப ஜ க - வுடன் ம தி மு க கூட்டணி வைக்கிறது என்று கூறும் வை கோ அவர்களை விமர்சனம் செய்கின்றார்.
இப்போது அ தி மு க -விற்கு ஆதரவு பிரச்சாரம் செய்யப்போவதாக கூறி உள்ளார் சீமான் அவர்கள், இதற்கான காரணம் மட்டும் யாருக்குமே தெரியவில்லை.
கூடங்குளம் அணுஉலை எதிர்த்து போராடிய உதயகுமார் அவர்களை பாராட்டி எத்தனையோ மேடைகளில் பேசிய சீமான் அவர்கள் கன்னியாகுமரியில் உதயகுமார் அவர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யாமல் அ தி மு க -விற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பது ஏனோ தெரியவில்லை. ஆகா இதுபோல் பல கேள்விகள் இன்று நாம் தமிழர் கட்சிமேல்.
இப்போது மக்கள் மனதில் சீமான் அவர்கள் ஒரு அ தி மு க ஆதரவாளனாகத்தான் தெரிகிறாரே தவிற இவராலோ அல்லது இவரது கட்ச்சியாலோ தமிழ் மக்களுக்கு எந்த ஒரு நன்மையையும் விளையப்போவதில்லை என்பதை தெளிவாகவே புரிந்திகொண்டுள்ளனர்.
ஆகவே இப்போது தெள்ளத்தெளிவாகவே தெரிகிறது நாம் தமிழர் கட்சி ஒன்றும் மாற்று அரசியல் புரட்சி அல்ல மற்றும் ஒரு அரசியல் கட்சியே.
எது என்னவான போதும் இப்போதும் தமிழையும் தமிழ் நாட்டையும் நேசிக்கும் பல லட்சம் தமிழர்கள் இருப்பது என்னவோ உண்மைதான்.
தமிழ் அவமானம் அல்ல எனக்கான அடையாளம். வருகைக்கு நன்றி.!
கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.

No comments:
Post a Comment